மதுரை விமான நிலையத்தில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி பேட்டி.

சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த திமுக வேட்பாளர்கள் மதுரை மத்திய தொகுதி பழனிவேல் தியாகராஜன், மதுரை வடக்கு தொகுதி தளபதி, மற்றும் மதுரை கிழக்கு தொகுதி மூர்த்தி ஆகியோர்க்கு அவரது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு தாரை தப்பட்டம் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளித்து, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.அப்போது மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,கழகத் தலைவர் தளபதி அவர்கள் நிச்சயமாக 2021ல் தமிழகத்தின் முதல்வராகி, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகள் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் மக்களுக்குத் தேவையான நன்மைகளையும், அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்றும் விதமான திட்டங்களை நாளைய தேர்தல் அறிக்கையில், தளபதி அறிவிப்பார்.திமுக வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்யும் தேதியை தளபதி அறிவிப்பார். அவரவர் விருப்பப்படி மனுத்தாக்கல் செய்யவும் தளபதி அனுமதிப்பார்.பண பலத்தை மிஞ்சக் கூடிய மக்கள் செல்வாக்கு தளபதி பக்கம் இருக்கிறது.ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்ப்பாத்துக் கொண்டு இருக்கிறார்கள்.தளபதியாளரின் தேர்தல் அறிக்கையும், அவரது கடின உழைப்பும் திமுக கூட்டணிக்கு மகத்தான வெற்றியைப் பெற்று தரும்.தலைவர் கலைஞர் வழியில், அவர் என்ன செய்ய வேண்டும் என நினைத்தாரோ, விட்டுப் போன அனைத்தையும் தலைவர் தளபதி தனது ஆட்சியில் செய்து முடிப்பார்.மக்கள் விரும்பக் கூடிய ஆட்சியாக, மக்கள் ஆட்சியாக தளபதி தலைமையில் அமையும்.மதுரை மாவட்டத்தைப் பொறுத்த வரை, இந்தப் பத்தாண்டு அதிமுக ஆட்சியில் மோனோ ரயில் திட்டம் மதுரைக்கு வரவில்லை. தமிழன்னைக்கு சிலை மதுரையில் வைக்க வில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்போடு இருக்கிறது.அதிமுக ஆட்சியில் அறிவித்ததை, அவர்கள் ஆட்சியில் விட்டுப் போய் செய்ய முடியாததை, தலைவர் தளபதி ஆட்சியில் செய்வோம்.ஊரெல்லாம் தொகுதிவாரியாக வாங்கிய மனுக்கள் மீது நிச்சயம் 100 நாட்களில் தளபதி செய்து முடிப்பார்.இந்தியாவிலேயே முன் மாதிரியான மாநில ஆட்சியை தளபதியார் தமிழகத்தில் நிச்சயம் உறுதியாகத் தருவார்.மக்கள் எதிர்ப்பார்ப்புகளை நிச்சயம் தளபதியார் நிறைவேற்றித் தருவார்.மதுரைக்குத் தேவையான சாலை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் தளபதியார் ஏற்படுத்தி தருவார்என மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!