கடந்த ஆண்டு முதல் உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரஸ் மீண்டும் தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வருவதை அடுத்து மதுரை மாவட்ட ஆட்சியாளர் மாநகராட்சி ஆணையாளர் மார்ச் 9ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் பொது இடங்களில் கட்டாயமாக பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் . இந்த நிலையில் மதுரை மாநகர சுகாதார அலுவலர் உத்தரவின்பேரில் மதுரை மாநகர் முழுவதும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் அதிரடியாக பொதுமக்கள் கூடும் உணவகங்கள் டீக்கடை உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாத ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதித்தனர் இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 77 வார்டு பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் பால்பாண்டி தலைமையிலான மாநகராட்சி ஊழியர்கள் முகமறியாத நபர்களுக்கு தலா ரூபாய் 200 விகிதம் அபராதம் விதித்தனர் பொது இடங்களில் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என கடை ஊழியர்களுக்கும் மற்றும் வெளியே வரும் பொதுமக்களுக்கும் கட்டாயமாக .முக கவசம் அணிந்து வர வேண்டும் என கேட்டுக்கொண்டார் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.