மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் பணி அர்ப்பணிப்புக்கு பெயர் பெற்றது சிறப்பான சேவைக்கு வாழ்த்துக்கள் மதுரை விமான நிலைய குமர் செந்தில் வேலவன் பேச்சுமதுரை மாவட்டம் மதுரை விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை 52-வது ஆண்டு புதிய தினம் கொண்டாடப்பட்டது.இதில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை துணை கமாண்டன்ட் உமாமகேசுவரன், உதவி கமாண்டன்ட் சனிஷ்க் மற்றும் வீரர்கள் அணிவகுப்புடன் நடைபெற்ற விழாவில் மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் .1959 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை மத்திய அரசின்கீழ் கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகம் ,விமான நிலையம், ராணுவ தளவாட தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணியாற்றி வருகின்றனர், இவர்களின் பணி அர்ப்பணிப்புடன் கூடிய து. அவர்களின் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் என கூறினார் .மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்புடன் கமாண்டோ வீரர்களின் சாகசங்கள், மோப்ப நாய்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தின.மேலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது என்பது குறித்து செயல்முறை விளக்கமும் நடைபெற்றது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.