மதுரை அண்ணாநகர் அருகே உள்ள தேவர் நகர் பகுதியிலுள்ள சக்கர ரெசிடென்சியில் மாதரைப்போற்று என்ற பெயரில் மகளிர் தின விழாவில் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ரோகினி சில்வர் மற்றும் மருத்துவர் ரீட்டா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.மகளிர் தினத்தை முன்னிட்டு கொரானா பெருந்தொற்று நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் அன்பு ராணி, காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய பஞ்சவர்ணம் மற்றும் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய பெண்களை போற்றும் விதமாக சக்கரா குழுமம் சார்பில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.இவ்விழாவில் பெண்களுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாகமதுரை அண்ணாநகர் காவல் துறை உதவி ஆணையர் லில்லி கிரேஸ் தலைமையில் மேலும் பல துறைகளில் சாதனைப் பெண்களுக்குவிருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.அதோடு இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர்கள் பல்வேறு கருத்துக்களை எடுத்துக் கூறினர்.விழாவின் முடிவில் சக்கரா குழுமத்தின் பங்குதாரர் லட்சுமி நன்றி கூறினார்.இந்த விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்குசக்கரா குழுமத்தின் சார்பில்சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.