உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – மாவட்ட ஆட்சியர் துவக்கிவைப்பு.

 உலக மகளிர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.மேலும் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும்மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டிவிழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு 100% வாக்களிப்போம் வாக்களிப்பது நம் கடமை என்பதை உணர்த்தும் வகையில்கோலமிட்டனர்.அதனை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் பார்வையிட்டு பாராட்டினார்.பின்னர் தொடர்ந்து ஒயிலாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்றமகளிர் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சட்டமன்ற தேர்தல் அழைப்பிதழை மாவட்ட ஆட்சி அன்பழகன் பொது மக்களுக்கு வழங்கினார்.பின்னர் பேட்டியளித்த மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன்,இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின நல்வாழ்த்துக்கள், வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒயிலாட்டம் தப்பாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை போற்றும் வகையிலும் வாக்காளர்விழிப்புணர்வு பேரணிநடைபெற்றது.அனைவரும் தவறாமல் 100% வாக்களிக்கவேண்டும் வாக்களிப்பது நமது கடமை, மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டிமாவட்டம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!