கிராம மக்கள் முழுவதும் வீடு வீடாக சென்று கால்களில் விழுந்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாமென கடுமையாக எதிர்ப்பு .

உத்தமபாளையம் அருகே கிராம மக்கள் முழுவதும் வீடு வீடாக சென்று கால்களில் விழுந்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாமென கடுமையாக எதிர்ப்பு . துணை முதல்வர் மகன் ஜெயபிரதீப் கம்பம் தொகுதியில் போட்டியிட்டால் கடுமையாக எதிர்ப்போம் என்றும் உறுதி.ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்ததாக கூறி DNT மற்றும் DNC என தங்களுக்கு மட்டும் இரட்டை சான்றிதழ் அளித்து இழிவு படுத்தியதாகவும் DNT மக்களின் வாழ்வாதாரங்களை நசுக்குவதாகவும் கூறிதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே அம்மாபட்டி பேரூராட்சியில் கிராம மக்கள் தங்கள் கிராமம் முழுவதும் அதிமுக விற்கு வாக்களிக்க மாட்டோம் எனக் கூறி கம்பம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் போட்டியிட்டால் கடுமையாக எதிர்ப்போம் எனவும் ஒரு கிராமம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தெருக்களில் வீடு வீடாக சென்று ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி அதிமுகவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாக சென்றனர்.

A. சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!