தமமுகவில் நீக்கப்பட்ட ஹைதர் அலி மீண்டும் கட்சியின் பெயரை பயன்படுத்துவதாகவும் அவர்மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல்துறை ஆணையாளரிடம் மனு.

தமமுக கட்சியை சேர்ந்தஹைதர் அலி என்பவர்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக த மு மு கதலைமை பொதுகுழுவால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.மேலும் அவர் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் ஹைதர் அலி தன்னை பொதுச்செயலாளர் என்று அடையாளப் படுத்திக் கொள்ளவோ நிர்வாகத்தை தலையிடவோ இந்தக் கூட்டங்கள் நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று உயர் நீதிமன்ற உத்தரவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் வரும் 14ஆம் தேதி அன்று தமமுக சங்கமம்என்ற பெயரில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத் தளங்களில் பல்வேறு பதிவுகளை பதிவு செய்யப்பட்டு வருகின்றார்.எனவே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர் மீண்டும் கட்சியை பெயரை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்பட்டு விடுகிறது.எனவே ஹைதர் அலி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையாளர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!