கல்யாணசுந்தரனார் தெரு பகுதியில் கால்நடைத் தீவனத்திற்கு சேமித்து வைக்கப்பட்ட வைக்கோல் படப்பில் திடீர் தீ விபத்து.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி கல்யாணசுந்தரனார் தெருவில் வசித்து வரும் ரெங்கசாமி என்பவர் கால்நடைக் தீவனத்திற்காக வைக்கோல் சேமித்து வைத்துள்ளார். இன்று நண்பகல் நேரத்தில் திடீரென வைக்கோல் படப்பில் தீப்பற்றியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து தண்ணீர் கொண்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்ததில், குறுகலான தெரு பகுதியில் வைக்கோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலையில் குடியிருப்பு பகுதியில் கிடைக்கும் நீரினை கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான வைக்கோல் எரிந்து சாம்பலானது. மேலும் இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் எதிர்பாராதவிதமாக தீ விபத்து நிகழ்ந்ததா? மர்ம நபர்கள் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!