மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் அஞ்சலியுடன் இராணுவ வீரர்கள் மரியாதையுடன் விளாச்சேரியில் நல்லடக்கம்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ராணுவ வீரர் அப்துல் சுக்கூர் (வயது 44 ) புணோவில் உள்ள 3வது இராணுவ என்ஜினீயரிங் பிரிவில் துணை இராணு அதிகாரியாக பணியாற்றினார்.கடந்த 20.02.202l. பணியின் போது மாரடைப்பால் மரணமடைந்த அவரது உடலை நல்லடக்கம் செய்ய இன்று மதியம் சொந்த ஊரான திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.மறைந்த அப்துல் சுக்கூர் 26 ஆண்டுகள் இந்திய ராணுவத்திற்காக பணியாற்றியுள்ளார்அப்துல் சுக்கூர் கடந்த 1995ம் வருடம் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார் அதேபோல் 20 .2. 2021 அன்று பணியில் சேர்ந்த அதே நாளன்று மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அப்துல் சுக்கூர் மறைவையடுத்து விளாச்சேரி கிராமமே சோகத்தில் மூழ்கியது.ஏராளமான பொதுமக்கள் அப்துல் சுக்கூர் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.அவரது உடலை புனேயில் இருந்து உடன் பணியாற்றிய ராணுவ வீரர்கள் தனி ஆம்புலன்ஸ் மூலம் மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். பொதுமக்கள் மரியாதை செய்வதற்கும் ராணுவ வீரரின் அப்துல் சுக்கூர் உடல் வைக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.இவருக்கு மமூசீனா (வயது 18) என்ற மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.அவரதுமகன் முன்தஸீர் (வயது 13) எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.அப்துல் சுக்குரின் வருமானத்தை மட்டுமே குடும்பத்தினர் எதிர் பார்த்த நிலையில் அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!