பாலமேடு அருகே ஜல்லிகட்டு காளை இறப்பு கிராம மக்கள் சோகத்துடன் இறுதி அஞ்சலி ஊர்வலம்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திர வெள்ளாலபட்டி கிராமத்தில் உள்ள சின்னம்மன் கோவில் காளை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்ததுஇதனால் கிராம மக்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்இந்த ஜல்லிகட்டு காளை கடந்த 25 ஆண்டுகளாக மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், புதுக்கோட்டை , போன்ற பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிகட்டு போட்டிகளில் தங்கம், வெள்ளி, டூவிலர், கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வாங்கி குவித்து ஊருக்கு நற் பெயரை வாங்கி கொடுத்து பெருமை படுத்தியுள்ளது இந்த ஜல்லிகட்டு காளைஇத்தகைய பெருமைமிகு ஜல்லிகட்டு காளை உடல் நலக்குறைவால் இறந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது கோவில்காளை இறந்த செய்தி கேட்டு சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் நேரில் வந்து இறந்த காளைக்கு அஞ்சலி செலுத்தினர்பட்டாசு, மேல தாளங்கள் முழங்க கிராம மக்கள் இறந்த கோவில் காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!