மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான நாடிகர் கருணாசின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தங்கரதத்தை முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி மாநில செயலாளர் அஜய் வாண்டையார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் தங்கத்தை இழுத்தனர்.முன்னதாக திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் வாயிலில் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கினர்.பேட்டிஅஜய் வாண்டையார் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர்.பேட்டியின் போது,தலைவர் கருணாஸ் சின்னம்மா சசிகலாவை ஆதரிக்கிறார். வருகிற சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை குறைந்தது நான்கு தொகுதிகளில் போட்டியிட ஒதுக்க கேட்டுள்ளோம். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை நிச்சயம் பெறுவோம்.எந்தெந்த தொகுதிகள் என எங்கள் தலைவர் கூட்டணிக் கட்சியினரோடு பேசி முடிவு செய்வார்என பேட்டியின் போது மாநிலத இளைஞரணி செயலாளர் அஜய் வாண்டையார் கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.