அனைத்து இஸ்லாமிய சார்பில்பெருந்திரளாக மதுரை ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது..

கடந்த ஜனவரி 10ஆம் தேதி அன்று மதுரை திருப்பாலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் தாமரை பொங்கல் விழா என்ற பெயரில் திருப்பாலை பள்ளிவாசல் பகுதியில் மேள தாளங்களுடன் வெறுக்கத்தக்க கோஷங்களுடன் கற்களை எறிந்து செருப்புகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டதை அப்பகுதி பொதுமக்கள் ஜமாத்தார்கள் தட்டி கேட்டவர்களை தகாத வார்த்தைகளாலும் கோஷங்களை எழுப்பியும் கற்கள் மற்றும் செருப்புகளை வீசி மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் அராஜகத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினரை கைது செய்ய கோரி மதுரை காவல் துறை உயர் அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் இ.ஆ.ப அவர்களிடம். ஒருங்கிணைப்பாளர் முஜிபுர் ரகுமான் தலைமையில் கூட்டமைப்பின் நிர்வாகிகள்கோரிக்கை மனு கொடுத்தனர்..இதில் தமுமுக,திமுக, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசியலீக்,பாப்புலர் ஃப்ரண்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, எஸ்.டி.பி.ஐ தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு, ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத், மனித நேய மக்கள் முன்னேற்ற கழகம், ஜாக், மக்கள் ஜனநாயக கட்சி, மஜ்லிஸ்கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத், மனித நேய ஜனநாயக கட்சி, ஜமாஅத்துல் உலமா சபை, ஒருங்கிணைந்த மக்கள் கழகம், கூட்டமைப்பின் நிர்வாகிகள் பொதுமக்கள் பெண்கள் திருப்பாலை பள்ளிவாசல் நிர்வாகிகள் என நுற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்….

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!