ஓட்டுனர் உரிமையாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். தென்னிந்திய வாகன ஓட்டுநர் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக அரசு கோரிக்கை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் தனியார் திருமண அரங்கத்தில் தென்னிந்திய வாகன ஓட்டுநர்கள் முன்னேற்ற கழகத்தின் கழக பெயர் வெளியீடு விழா கழகத்தின் அனைத்து பொறுப்பாளர் பதவி ஏற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.இந்த முப்பெரும் விழாவிற்கு மாநிலத் துணைத் தலைவர் கணேசன்சாமி தலைமையிலும், மாநில கௌவுரவ த் தலைவர் லிங்கம் மாநில பொதுச்செயலாளர் மணி மாநில பொருளாளர் பழனி முன்னிலையிலும் நிறுவனத் தலைவர் கமலஹாசன் மாநிலத் தலைவர் மீனாட்சிசுந்தரம் வழக்கறிஞர் மணவாளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் .இந்த விழாவிற்கு, சென்னை திருவண்ணாமலை சிவகங்கை மதுரை கடலூர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர் .இந்த விழாவில் , மத்திய மாநில அரசுகள் ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கொரோனா கால கட்டத்தில் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர் உரிமையாளர்கள் குடும்பங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆன்லைன் அபராதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன பின்னர் , செய்தியாளர் சந்திப்பில் மாநிலத் துணைத் தலைவர் கணேசன்சாமி கூறியது ஓட்டுநர் உரிமையாளர்களுக்கு என்று தனி நலவாரியம் அமைக்க வேண்டும் ஓட்டுநர்கள் இரண்டரை கோடி பேர் உள்ளனர் இதனால் அரசு தனி நலவாரியம் அமைக்க கோரிக்கையாக வைக்கப்படுகிறது எனக்கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!