கொடிமங்கலம் ஊராட்சியில் அம்மா அரசில் நிறைவேறி உள்ளது- அமைச்சர் செல்லூர் கே ராஜூ

மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சியில் அம்மா அரசு ரூபாய் 5 கோடி அரசு நிதியில் பாலம் ரோடு குடிநீர் மின்விளக்கு உட்பட அடிப்படை வசதிகளை இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளோம் இன்னும் அம்மா அரசுபல்வேறு திட்டப் பணிகளை மக்கள் கேட்காத திட்டங்களை செய்து வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசினார்.மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி திருப்பரங்குன்றம் யூனியன் கொடிமங்கலம் ஊராட்சியில் ரூபாய் 8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.இக் கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் செல்லூர் கே ராஜூ பேசியதாவது இப்பகுதியில் 25 குடும்பங்களுக்கு அம்மா அரசு புதிய பசுமை வீடுகள் கட்டப்பட்டன மேலும் 250 பசுமை வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது ரூபாய் 82 லட்சத்தில் குடிநீர் திட்டப்பணிகள் ரூபாய் 2.44 கோடி நிதி மதிப்பீட்டில் பாலம், சாலை, குடிநீர், கழிவு நீர் வடிகால்கள், பள்ளிகள், பராமரிப்பு போன்ற அடிப்படை வசதி பணிகள் நிறைவு பெற்றுள்ளன இத்தொகுதியில் ரூபாய் 1.81.33 கோடி தொகை விவசாய கடன் உதவி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது அதனால் 204 குடும்பங்கள் பயன் பெற்றுள்ளனர் திமுக ஆட்சியில் வெறும் ரூபாய் 16 லட்சம் தள்ளுபடியில் 11 பேர் தான் பயன்பெற்றனர் ஆகவே மேற்கு தொகுதி கொடிமங்கலம் பகுதியில் மட்டும் இதுவரை புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியில் ரூபாய் 4.66.580 கோடிநிதியில் இத்தொகுதி மக்களின் மன நிறைவு பெறும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது ஆகவே இப்பகுதி மக்கள் அம்மா ஆட்சிக்கு தொடர்ந்து இரட்டை இலைக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன் இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். இந்நிகழ்ச்சியில் பரவை பேரூராட்சி முன்னாள் சேர்மன் பரவை ராஜா கொடிமங்கலம் செயலாளர் கருப்பணன் ஊராட்சி செயலாளர் முருகன், தங்கராஜ், சாகுல் மைதீன், சண்முகநாதன், கூட்டுறவு சங்க தலைவர், முத்து, ஊராட்சித் தலைவர்கள் உமாதேவி திருக்குமரன் கந்தசாமி மணிகண்டன் துணைத்தலைவர் ஜெயலட்சுமி கவிமணி தாசில்தார் பாண்டி திருப்பரங்குன்றம் யூனியன் கமிஷனர் பாண்டியன் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகள் அங்கன்வாடி துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!