தொடர்ந்து காய்ந்த முட்களையும் குப்பைகளை எரிப்பதால் புகையால் மாசடையும் மதுரை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் தொடர்ந்து திறந்தவெளியில் காய்ந்த கருவேல முட்களையும் மரங்களையும் மற்றும் குப்பைகளை எரிப்பதால் மதுரை மாநகர் பல பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் தினசரி நடந்து வருகிறது இதனால் சில இடங்களில் தீ கொழுந்துவிட்டு எரிவதால் வீட்டில் அருகில் குடியிருப்பவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து தீயை அணைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது தினசரி இரண்டு முதல் ஐந்து முறையாவது தீயணைப்பு வாகனம் இதுபோன்ற சம்பவங்களுக்கு செல்வதாக தெரியவருகிறது இதனை தடுக்க திறந்த வெளியில் குப்பைகளை எரிக்கும் இடத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவர்கள் எரிக்கும் குப்பையால் மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படுவதாகும் சாம்பல்கள் வீட்டினுள்ளே வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மாநகர் முழுவதும் புகை மண்டலமாக மாசடைந்து. காணப்படுகிறது.. இதுபோன்ற சம்பவம் நேற்று மாலை அரங்கேறியது மதுரை பைபாஸ் சாலை பொற்குடம் அடுக்குமாடி குடியிருப்பு அருகே உள்ள ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் திறந்த வெளியில் குப்பையை மற்றும் மரக்கட்டைகளை எரித்ததால் வீட்டின் அருகே உள்ள தென்னை மரம் ஒன்றும் தீப்பற்றி எரிந்தது இது குறித்து வீட்டின் உரிமையாளர் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததை சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர் இதேபோன்று மதுரை பைபாஸ் சாலை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள திறந்தவெளி பகுதியில் மர்ம நபர் ஒருவர் குப்பைகளை தீ வைத்து எரித்தார் இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளருக்கு மற்றும் வார்டு சுகாதார அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சுகாதார அதிகாரி மற்றும் ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்கள் இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்ட போது பொது இடங்களில் யாரேனும் குப்பைகளையும் மற்றும் மரங்களையும் முட்களையும் தீ வைத்தால் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அனைத்து வார்டு அதிகாரிகளுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவும் மீறி யாரேனும் குப்பைகளை எதிர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடுமையான அபராதமும் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் எச்சரிக்கை விடுத்துள்ளார் .புகையில்லா மாநகர மதுரை மாநகரம் மாறுவது மக்கள் கையிலே உள்ளது என மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!