வைகை ஆற்றில் நீரில் மூழ்கி சிறுவன், சிறுமி பலி

மதுரை யாகப்பா நகரை சேர்ந்த ஷேக் அலி அவரது மகன் முகமது ரியாஸ் 8. வண்டியூர் அரசு பள்ளியில் ஐந்தாம் முடித்து படித்து வருகிறார் .உறவினர் சையது இப்ரஹிம் மகள் பரீதா பீவி 11. அதே பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார் .இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் வண்டியூர் வைகை ஆற்றில் மண்டபம் அருகே குளிக்கச் சென்றனர். மூழ்கினார்கள். மாலையில் முகமது யாசின் உடல் மிதந்தது .சுமார் இரண்டு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் பரீதா பீவி உடலை மீட்டனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. இதுகுறித்து மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது… அடுத்த சில மணி நேரத்திலேயே இதற்கிடையே வைகை ஆற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது. பிரேதத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!