தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக கொலையான பெண் உடல் நல்லடக்கம்

மதுரை செல்லூர் மீனாம்பாள் புரத்தை சேர்ந்த சேகர் .இவரது மனைவி வஞ்சி மலர் 49 .கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் மற்றவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அதனால் ஆத்திரம் அடைந்த அவரது மகன் ஓம்சக்தி 19 ஒன்றாம் தேதி நள்ளிரவு தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார். ஓம் சக்தியை கைது செய்த செல்லூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதனை செய்து முடிந்த நிலையில் கொலையான வஞ்சி மலரின் உடலை வாங்க யாரும் முன் வராததால் ஆதரவற்று பிணமாக பிணவறையில் வைக்கப்பட்டது. ஐந்து நாட்களாக பெற யாரும் முன்வராத நிலையில் செல்லூர் உதவி காவல் ஆய்வாளர் ஜான் முயற்சியில் நேதாஜி மெடிட்ரஸ்ட் நிறுவனர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் மருத்துவமனையிலிருந்து வஞ்சி மலரின் உடலைப் பெற்று முறைப்படி தத்தனேரி மைதானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!