விபத்தில் தனியார் கல்லூரி துணை விரிவுரையாளர் பலி

மதுரை பழங்காநத்தம் வசந்த நகர் சேர்ந்த ஆதிநாராயணன் இவரது மகன் பாலமுருகன் வயது 36 (ஹெல்மெட் அணிந்திருந்தார்) திருப்பரங்குன்றம் வடபழஞ்சி உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார் இந்த நிலையில்  மதுரை பைபாஸ் சாலை வழியாக அவரது இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார் விராட்டிபத்து செக்போஸ்ட் அருகே செல்லும் பொழுது எதிரே உரம் ஏற்றி வந்த லாரி அவர் மீது பயங்கரமாக மோதியது இதில் நிலைகுலைந்த பாலமுருகன் லாரியின் சக்கரத்தில் அவர் தலை ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் தகவலறிந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் கல்லூரிக்கு சென்ற கல்லூரி விரிவுரையாளர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!