சிறுமியை பாலியல் பலாத்காரம் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் கெளதம் (23) இவர் அதேபகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியுடன் நட்புடன் பழகியுள்ளார்.இதனை பயன்படுத்திய வாலிபர் கெளதம் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி அச்சிறுமியை டூவிலரில் கடத்தி சென்று ஊருக்கு ஒதுக்குப் புறமான கண்மாய் பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.அதன் பிறகு மாணவிக்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்கு சென்றதில் மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.சிறுமியின் பெற்றோர்கள் மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை செய்து கெளதமை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!