நாராயணபுரத்தில் கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு :

மதுரை நாராயணபுரத்தில் கோவில் கும்பாபிஷேகத்தில் கைவரிசை 4 பெண்களிடம் 19 பவுன் திருட்டு :மதுரைநாராயணபுரத்தில் நடந்த கோயில் கும்பாபிஷேக விழாவில் 4 பெண்களிடம் 19 பவுன் நகையை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்மதுரை நாராயணபுரத்தில் மந்தையம்மன் கோவில் உள்ளது .இந்த கோவிலில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது வழக்கம். தற்போது அந்த பகுதியில் பால வேலை நடைபெறுவதால் அந்த கோயிலை மற்றொரு இடத்திற்கு இடமாற்றம் செய்தார்கள். கட்டிடக்கலையின்நவீன முறையாக கோவிலைஅப்படியே நகற்றிமாற்று இடத்தில் வைக்கப்பட்டது.பின்னர் பழுது பார்க்கும் வேலை எல்லாம் நடந்தது.அதைத்தொடர்ந்துமுந்தைய மூன்று நாட்கள் யாகசாலை உட்பட‌ பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன.பின்னர் நேற்று அதிகாலை கும்பாபிசேகம்நடந்தது.கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது .அப்போது பக்தர்கள்கூட்டத்தில் கைவரிசையைகாட்டி நான்குபெண்களிடம் தங்கநகையை மர்மநபர்கள் திருடிச் சென்று விட்டனர் .நாராயணபுரம் கோலதெருவைசேர்ந்த ஞானசுந்தரி 65 என்பவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை மர்ம ஆசாமிகள் பறித்துச்சென்றுவிட்டனர்.மற்றொருவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் இந்திராணி65.இவர் இந்த கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.அவர் அணிந்திருந்த 6 பவுன் நகையை மர்மநபர்பறித்துசென்றுவிட்டார்.மற்றொரு நபர் கேசவசாமி தெருவை சேர்ந்தவர் தமிழரசி 60 . அவர் அணிந்திருந்த ஐந்தரைபவுன் தங்கசெயினையும் கூட்டத்தில் பறித்துவிட்டனர்.நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த அழகம்மாள்70அவர்.அணிந்திருந்த 3 பவுன் நகையை கும்பாபிஷேகத்தில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது ஆசாமிகள் பறித்துவிட்டனர். இது தொடர்பாக அவர்கள்கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்பறித்த ஆசாமிகளை தேடிவருகின்றனர்.வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!