இளைஞர்கள் சார்பாக நடைபெற்ற முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் 15 காளைகள் பங்கேற்பு, 6 மாடுபிடி வீரர்கள் காயம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏ.தர்மசானப்பட்டியில் கிராம இளைஞர்கள் சார்பாக முதலாம் ஆண்டு வட மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது, அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில், மேலூர், அரிட்டாப்பட்டி, மதகுப்பட்டி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 15 காளைகள் பங்கேற்ற இப்போட்டியில் மைதானம் நடுவே உள்ள வடத்தில் கட்டப்பட்ட காளையினை 9 பேர் கொண்ட மாடுபிடி வீரர்கள் 25 நிமிடத்தில் பிடிக்க வேண்டும், அப்படி பிடிக்காத காளைகள் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டு காளையின் உரிமையாளர்களுக்கு வெள்ளிகாசுகள் அண்டா, செல்போன், ரொக்கப்பணம், குத்துவிளக்கு, மற்றும் மரக்கன்று உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது, அதேபோல், காளைகளை பிடித்த மாடுபிடி குழுவினர்களுக்கும் கோப்பை, கேடயம், குத்துவிளக்கு, சைக்கள், சேர், வெள்ளிக்காசு, ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது, இந்த போட்டியின் போது காளைகளை பிடிக்க முயன்ற 6 மாடுபிடி வீரர்கள் மாடு முட்டியதில் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து மேல்சிகைச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் …

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!