சரக்கு போக்குவரத்தில் மதுரை ரயில்வே கோட்டம் சாதனை.

ரயில் சரக்கு போக்குவரத்தில் மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இருந்து இரண்டாவது முறையாக 25 ரயில் பெட்டிகளில் டிராக்டர்கள் வங்காளதேசத்தில் உள்ள பேனாபோல் என்ற ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் 23,15,954/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.மேலும் இந்த நிதியாண்டில் தூத்துக்குடியிலிருந்து விவசாய உரப் பொருட்கள், தூத்துக்குடிதுறைமுகத்திலிருந்துநிலக்கரி,மானாமதுரையில் இருந்து கருவேலங்கரி, வாடிப்பட்டியிலிருந்து டிராக்டர்கள் ஆகியவை முதன்முறையாக ஒரே நாளில் அதிகபட்சமாக 306 ரயில் பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் 1,87,98,302/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!