செம்மினிபட்டியில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவர்க்கு இரும்பு ராடால் அடித்து கொலை முயற்சி.

மதுரை மாவட்டம் செம்மினிபட்டியில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவர்க்கு இரும்பு ராடால் அடித்து கொலை முயற்சி*மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வர், இவர் சொந்தமாக மினி ஆட்டோ, குட்டியானை வண்டி வைத்துள்ளார்.அதே கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமகண்ணன், இவர் ஷேர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.பரந்தாம கண்ணன் ஒருவருடத்திற்கு முன்பு வீட்டு தேவைக்கு ஈஸ்வரனிடம் கடனாக சிறிது பணம் வாங்கியுள்ளார்.கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் அதோ தருகிறேன், இதோ தருகிறேன் என்றும் ஒருசில நேரம் நான் பணம் வாங்கவே இல்லை என்றும் கூறியுள்ளார்.இந்நிலையில் கடந்த 29.1.2021 அன்று இரவு ஈஸ்வரன் கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதற்கு பரந்தாம கண்ணன் மற்றும் அவரது நண்பரான சங்கிலி கண்ணன் என்பவரும் சேர்ந்து ஈஸ்வரன் மற்றும் உடன் இருந்தவரை இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதனால் இருவர்க்கும் தலை மற்றும் கைகால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொடுத்த பணத்தை திருப்பி கேட்டவர்க்கு நேர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!