வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட் வரையில் கேட்போம் என புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் பேட்டி .

மதுரை சிந்தாமணி பகுதியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் தங்கியுள்ள விடுதியில் புதியநீதி கட்சியின் தலைவர் ஏசி சண்முகம் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது;புதிய நீதி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறது, குறிப்பாக வாஜ்பாய் , ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் இருந்த போதும் தற்போதும் தேசிய ஜனநாயக கூட்டணி அங்கம் வகித்த வருகிறோம்.2014 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தலைமை அறிவிக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்.தற்போது பிரதமர் மோடியின் அரசு இந்தியாவை வல்லரசாக மாற்றி உள்ளது. அதன்படி கொரோன தடுப்பூசி யை உலக நாடுகளுக்கு வழங்கி சிறப்பாக செயலாற்றி வருகிறார்.நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 7 முதல் 8 சீட் வரையில் கேட்போம்.திமுக ஸ்டாலினை பொறுத்தவரையில் எடப்பாடி முதல்வராக பதவியேற்றது முதல் 100 நாட்கள் கூட நிலைக்காது என்று கூறிய நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக பயணித்து வருகிறார்.தேர்தல் தேதி அறிவித்தபின்னர் கூட்டணி ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெறும், தற்போது நட்பு ரீதியாக சந்திக்க வந்ததாகவும்,வந்ததாகவும் தெரிவித்தார்.சசிகலாவால் தான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார் என்று பிரேமலதா விமர்சனம் செய்துள்ளார் என்ற கேள்விக்கு; அது பிரேமலதா அவர்களின் கருத்து என கூறினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!