பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி CPS ஒழிப்பு இயக்கம சார்பாக அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்.

அரசுத் துறைகளில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் சீருடைப் பணியாளர்கள் என ஆறு லட்சம் ஊழியர்கள் நடைமுறையில் இல்லாத திட்டமான சிபிஎஸ் திட்டம் எனப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருகிறார்கள்.இந்த திட்டத்தின் மூலம் ஓய்வுக்கு பின்னர் அரசு ஊழியர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்கபட்டு பல சலுகைகளை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.எனவே புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்னும் அமைப்பின் மூலம் போராடி வருகின்றனர்.இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்ற விதி எண் 110 மற்றும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அளித்த வாக்குறுதிகளையும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அளித்த எழுத்துபூர்வமான தேர்தல் வாக்குறுதிபடியும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டம் இன்று மாநில அளவிலான தமிழகம் முழுவதும் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக மதுரை அண்ணாநகர் பகுதியில் மதுரைமாவட்ட சீபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேமா ஆனந்தி தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் உட்பட அரசு ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!