மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி குருவையா, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:சட்டமன்ற தேர்தல்களில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு என தனித் தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு என மொத்தம் 46 தனித் தொகுதிகள் உள்ளன. ஆனால், மாநிலங்களவை எம்பிக்கான தேர்தலில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப் படுவதில்லை. இதனால், மாநிலங்களவை உறுப்பினர் நியமனத்தில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையே உள்ளதுஇது தொடர்பாக நான் அனுப்பிய மனுவை, சட்டமன்ற செயலரின் பரிசீலனைக்கு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்திடத் தேவையான வகையில் விதிகளை உருவாக்குமாறு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது அப்பதோது மனு குறித்த விரிவான விசாரணையை பிப்ரவரி மாதம் 11 தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.