மதுரையில் ஒருங்கிணைந்த மக்கள் கழகம் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. மாநில தலைவர் ஜவஹர் அலி திறந்து வைத்தார். மாநில பொதுச்செயலாளர் முகமது பிலால், தலைவர் ஜவஹர் அலி ஆகியோர் கூறியதாவது:மதுரையில் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன் பா.ஜ.க., சார்பில் திருப்பாலையில் நடந்த பொங்கல் விழாவில் அங்குள்ள பள்ளிவாசல் மீது பா.ஜ.க.,வினரும், இந்து முன்னணியினர் சிலரும் காலனிகள். கற்களை வீசி தாக்கினர். இதுதொடர்பாக போலீசார் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல். விசாரணை என்ற பெயரில் இஸ்லாமியர்களை அழைத்து சென்று துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும். ஒருங்கிணைந்த மக்கள் கழகம் அரசியல் சார்பற்ற. மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிப்பவர்களுக்கு தேர்தலின் போது ஆதரவு அளிப்போம். யாருடனும் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. பா.ஜ.க., அ.தி.மு.க., மக்கள் விரோத அரசுகளாகவே உள்ளன. தி.மு.க., மீது மக்கள் மத்தியில் சமூக சித்தாந்த அடிப்படையில் நல்லுறவு உள்ளது. அவர்களை ஆதரிப்போம்.டில்லியில் போராடி வரும் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு முன்வரவில்லை. 50 நாட்களுக்கும் மேலாக அமைதியாக போராடி வரும் விவசாயிகளை சமூக விரோதிகள் முத்திரை குத்த துவங்கி விட்டது. உரிமைக்காக போராடுபவர்களை தேச துரோகிகள் என்றால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போராடிய பா.ஜ.க., வினரும் தீவிரவாதிகள் தானே என்றனர்.மாநில துணை பொது செயலாளர் இப்ராஹிம் ஷா, மாநில செயலாளர் அப்துல் முனாப், மாளில துணைத் தலைவர் முகமது தவ்ஹீத், மாவட்ட துணை செயலாளர் அஷ்ரப்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.