அ.ம.மு.க மாநில (சசிகலா) சின்னம்மா பேரவை நிறுவனத் தலைவர் ஆனந்த், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு.

 சின்னம்மா விடுதலை ஆவதற்கு முன்னால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அவருக்கு கொரானா தொற்று உறுதியானது அவரை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது உடல்நிலை பற்றி கேள்விப்பட்டு கடந்த ஒருவரா காலமாக பெங்களூரில் விக்டோரியா மருத்துவமனையில் தங்கி முகம்மிட்டு அவரது உடல்நிலை குறித்து மருத்துவரிடம் அவ்வப்போது ஆலோசித்தோம்.சசிகலா அவர்கள் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக விடுதலையாகியுள்ளார். மருத்துவமனையில் சிறிது ஓய்வு பெற்று விரைவில் தமிழகம் திரும்புவார் என்று தெரிவித்தார்.சசிகலாவை சந்திக்க மருத்துவ நிர்வாகம் அனுமதித்தனரா. என்ற கேள்விக்கு?_விக்டோரியா மருத்துவமனை யாரையும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை, வளாகத்தில் வெளியே இருந்து அவரது உடல்நிலை பற்றி கேட்டு அறிந்தோம். அவருக்கு கொரானா தொற்று இல்லை, சளி தொடர்பான பிரச்சனையுள்ளது அவர் நலமுடன் உள்ளார். ஆளும் கூட்டம் சசிகலா மீது சில சதிதிட்டங்களை தீட்டியது, அந்த சதி திட்டத்தையும், சிறை வாசம் வென்று, நோயை வென்று தியாக சுடராக, வெற்றி வேங்கையாக, வீர மங்கையாக வெளிவருவர் அவரது வருகை தமிழக அரசியலில் மாற்றம் நிகழும் 2021 சட்ட மன்ற தேர்தலில் சின்னம்மா கைக்காட்டுபவர் முதல்வர் என்றார்.சுதாகரன் விடுதலை குறித்த கேள்விக்கு:அவர்கள் வெளிவர சில காலம் ஆகும், அவர்கள் சம்பந்தமான ஆவணங்களை வழக்கறிஞர் மூலமாக தயார்செய்யப்படுகிறது.சசிகலா வெளிவந்தால் அரசியல் மாற்றம் நிகழாது என்று தமிழக முதல்வர் கூறியது குறித்த கேள்விக்கு:சின்னம்மா கைகளிலும், கால்களிலும் விழுந்து ஆதரவு பெற்றவர்கள் இன்றைக்கு ஆட்சியில் இருக்கிறார்கள். ஆளில்லை என்று பேசுகிறார்கள். ஆள் இல்லை என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் தமிழக மக்கள் அதற்கு தக்க பதிலடி கொடுப்பார் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் நிகழும், அதிமுகவின் பொதுச் செயலாளர் தியாக தலைவி சின்னம்மா.!அதிமுகாவில் தமிழக முதல்வரும் துணை முதல்வரும் ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே, அவர்கள் வேண்டுமானால் அதிமுக பொதுச் செயலாளருக்கு என்று பதவி போட்டிருக்கலாமே.? கேள்வி எழுப்பியிருக்கிறார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!