மதுரை வடக்குமாசி வீதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதி யுவகேந்திரா சார்பாக பார்வையற்றோருக்கு இலவச அரிசி மற்றும் சமூக சேவையாளர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கும் நிகழ்ச்சி வழக்கறிஞரும் தனியார் பள்ளி தலைவருமான ராஜாராம் தலைமையில் பத்மாலயா மருத்துவமனையின் தலைவர்குரு சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அன்னாநகர் சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்ட சமூக சேவையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் 50க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கும் சிறப்பாக சேவை செய்த சமூகசேவை யாளர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி கௌரவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.