புதிய வேளாண் திருத்த சட்டத்தில் உள்ள முக்கிய மூன்று சட்டங்களானவிலை உறுதி மற்றும் பண்ணை சேவை சட்டம்…வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டு சட்டம்…அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம்….ஆகிய கொடும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும்இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் ட்ராக்டர் பேரணி நடத்துகிறார்கள் பேரணிக்கு ஆதரவாகவும் விவசாயிகளின் விரோதியாக செயல்படக்கூடிய மத்தியில் ஆளுகின்ற மக்கள் விரோத பாஜக மோடி அரசின் சட்டத்தை கண்டித்தும் மதுரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் விவசாயிகள் ஆதரவு பேரணி தேசிய கொடி ஏந்திஏர் கலப்பை நெல் நாற்றுக்களுடன் பேரணிமதுரை முனிச்சாலை பள்ளிவாசல் பகுதியில் துவங்கி தெப்பக்குளம் ரோடு கணேஷ் தியேட்டர் அருகில் நிறைவு பெற்றது.எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்புரை நிகழ்த்தினார்…துணைத் தலைவர் சீமான் சிக்கந்தர், செயலாளர்கள் கமால் பாஷா, சிக்கந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..துணை தலைவர் சுப்பிரமணியன் நன்றியுரையாற்றினார்…பேரணிக்கு மாவட்ட தொகுதி கூட்டமைப்பினர் முன்னிலை வகித்தனர்..நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் முழங்க பேரணியில் நடந்து சென்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.