அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அருகே தூய்மை பணியில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வரவேற்பு.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை அருகே தூய்மை பணியில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் வரவேற்பு* மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில், திருநகர் பக்கம் தன்னார்வலர்கள், நேதாஜி மெடி ட்ரஸ்ட், ஹரி கிருஷ்ணா வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன், மக்கள் தொண்டன் அசோக்குமார் , கலாம் வழி நண்பர்கள் செந்தில் குமார் , எம்மால் இயன்றது கண்ணன் , RJ அசீஸ் ஹக்கீம் இணைந்து இன்று அரசு இராசாசி மருத்துவமனை பிணவறை அருகில் மரக்கன்றுகள் 100 நடப்பட்டது, சுவற்றில் எச்சரிக்கை வாசகங்கள் எழுதப்பட்டது.சுவரொட்டிகள் அகற்றப்பட்டது. வண்ணம் தீட்டப்பட்டு வாசகங்கள் எழுதப்பட்டது, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதற்கு முன் இப்பகுதி வாகனங்கள் நிறுத்தப்பட்டு நெரிசலாகவும், மது அருந்தும் மற்றும் சிறுநீர் கழிக்கும் மறைவான இடமாகவும் அசுத்தம் நிறைந்த இடமாகவும் இருந்தது.மருத்துவமனை ஒட்டிய வளாகம், மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடமும் இதுவே.ஆகவே தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இடத்தை மாற்றும் மதிச்சியம் காவல்துறையின் முயற்சியில் சமூக ஆர்வலர்களின் இது போன்ற முயற்சிகளும் முக்கியமானது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!