பொதுமக்களிடையே ஏமாற்றம் உள்ளது – அதனால் கட்டாயமாக ஆட்சி மாற்றம் நிகழும் என வைகோவின் புதல்வர் துரைவையாபுரி மதுரையில் பேட்டி.

ராமநாதபுரத்தில் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட நான்கு மீனவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக வைகோவின் மகன் துரைவையாபுரி ராமநாதபுரம் செல்வதற்காக மதுரை மாவட்டம் மேலூர் வந்தார்.அப்போது மேலூரில் மதிமுக மதுரை நகர் மாவட்ட செயலாளர் பூமிநாதன் மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் மாரநாடு உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் துரை வையாபுரி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,தமிழகத்தில் மக்கள் ஏமாற்றத்துடன் உள்ளனர்.அதனால் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் எனவும் டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக விவசாயிகள் நினைக்கின்றனர் இதனால் இந்த சட்ட மசோதா குறித்து விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை என கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!