குளிக்க சென்ற 70 வயது முதியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான சரவண பொய்கை குளம் கோவிலின் பின்புறம் உள்ளது. படிகளில் பாசம் அதிகமாக இருந்ததால் குளம் நிலைதடுமாறி குளத்திற்குள் மூழ்கினார். இந்த குளத்தை அப்பகுதியை சுற்றியுள்ள குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இன்று காலை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கிருஷ்ணன் என்பவர் உறவினர்களோடு குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார்.நீரின் கொள்ளளவு அதிகமாக இருந்தால் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு முதியவர் சென்று விட்டதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.இதனை தொடர்ந்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மதுரை டவுன் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.குளத்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை தீயணைப்புப் படையினர் வெளியே கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக முதியவரின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும், திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது எனவே மாநகராட்சி நிர்வாகம் சரவணப் பொய்கைக் குளத்தில் நிரந்தரமாக யாரும் குளிக்கக் கூடாது,துணி துவைக்க கூடாது என தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!