மதுரை அனுப்பானடி மின்நிலையத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்ப்பவர் மதுரை மாவட்டம் பொட்டபாளையத்தை சேர்ந்த அழகுமலை இவர் நேற்று இரவு நேர பணியில் ஈடுபட்டார். அதேபோல் அனுப்பானடி துணைமின் நிலையமான சிந்தாமணி மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றுபவர் மாடக்குளம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பகுதியைச் சேர்ந்த சேர்ந்த பிச்சை. இவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். இருவருக்குமே போதை தலைக்கேறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பானது.
இதில் மின் பாதை ஆய்வாளர் பிச்சை ஆத்திரத்தில் தூய்மை பணியாளர் அழகுமலையை அருகில் இருந்த கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் அழகுமலை கிடப்பதை பார்த்த மின்பாதை ஆய்வாளர் பிச்சை உடனடியாக அனுப்பானடி பகுதி இயக்குனர் அவர்களுக்கு தகவல் தெரிவித்ததுடன் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அழகுமலை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் செவிலியர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார் அழகு மலையை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிச்சையை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.