திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரானா தொற்றை காரணம் கூறி தைப்பூச தெப்பத்திருவிழா நிகழ்ச்சி ரத்து.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.த்மிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழா நிகழ்ச்சி நடைபெறும்.இந்த ஆண்டு 10 நாள் திருவிழா கொடி ஏற்றத்துடன் 18ம் தேதி துவங்கிய விழா தெப்பத்திருவிழாவிற்கு மட்டும் கோவில் நிருவாகம் கொரான தொற்றை காரணம் காட்டி ரத்து செய்துள்ளது.ஆனால் உண்மையில் தெப்பத்திற்கு நடைமுறைக்கு வர வேண்டிய தண்ணீரை கொண்டு வராததால் தெப்பம் தண்ணீரின்று காணப்படுகிறது.தண்ணிரை முன்னேற்பாடாக கொண்டுவந்து தெப்பத்தில் நீர் நிரப்பாமல் விட்டதால் தெப்பத் திருவிழா ரத்து செய்யப்பட்டதை கண்டித்துபக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தெப்பகுளத்தில் குப்பைகள் அழுக்குகள் சேர்ந்து மாசடைந்துள்ளது இதனை தூய்மைப்படுத்தி தெப்பத்தில் நீர் விட்டு தற்போது தெப்பத் திரு விழா நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து தெப்பகுளத்தை நிரப்ப கடந்த காலங்களில் ஏற்பாடு செய்து தெப்பத் திருவிழா நடைபெற்றது .இந்த ஆண்டு அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்யாததால் தெப்பத் திருவிழா நிகழ்ச்சி காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என பக்தர்கள் கூறுகின்றனர்


செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!