மதுரை மாவட்டம் தெற்கு வட்டார போக்குவரத்து காளவாசல் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது இங்கு தினசரி சுமார் 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் எஃப் சி பார்ப்பதற்கும் மற்றும் புதிய வாகனங்கள் பதிவு
செய்வதற்கும் வருகிறது தற்பொழுது அமைந்துள்ள இடத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினாலும் பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலம் நேரு நகர் சந்திப்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தணிக்கைக்காக அணி வகுத்து நிற்கிறது இதனால் காளவாசல் பழங்காநத்தம் போடி லயன் மேம்பாலத்தில் சாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் சைக்கிள் முதல் அவசர கால ஊர்தி வரை செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது மேலும் இப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்ல கூட முடியவில்லை என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர் இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அச்சம் தெரிவிக்கின்றனர் பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வாகன தணிக்கை இடத்தை மாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் போக்குவரத்து நெரிசலை குறைக்க வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா???? எதிர்பார்ப்புடன் நேருநகர் பொதுமக்கள்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.