கணைய அறுவை சிகிச்சைக்காக அலையும் கூலித் தொழிலாளியின் மகள் அலட்சியப் போக்குடன் செயல்படும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை .

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளி அம்மன் கோவிலைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மருதுபாண்டி இவரது மகள் நிரஞ்சனா வயது 3 இந்த குழந்தைக்கு பிறந்ததில் இருந்து கணைய அடைப்பு பிரச்சனை உள்ளது இதனால் குழந்தை வயிற்றில் வழியாகவே சிறிய துளையிட்டு மலம் கழித்து வருகிறது இதுகுறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினசரி அலைந்து கொண்டே இருக்கிறார்கள் மேலும் அமைச்சரிடமும் மனு கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை எனவும் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்க ரூபாய் 3 லட்சம் வரை கேட்கிறார்கள் பணம் இருந்தால் நாங்கள் ஏன் அரசு மருத்துவமனையை நாடி வருகிறோம் என அரசு மருத்துவமனை நாடி வந்தால் எங்களிடம் போதிய மருத்துவ வசதி இங்கு இல்லை என மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக குற்றம் சாட்டுகிறார்கள் தினசரி எனது குழந்தை அவதிப்படுவதை பார்ப்பதற்கு மிகவும் வேதனையாக இருப்பதாகவும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என்று கூறும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான வசதி இல்லை என்று மறுமுறை படுக்கை வசதி இல்லை எனவும் நீங்கள் அடுத்த மாதம் வாருங்கள் என சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்கள் சொல்லும்பொழுது மனவருத்தம் அடைகிறான் அவரது தாயார் முருகேஸ்வரி கண்ணீர் மல்க தெரிவித்தார் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகமும் மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்,வலியுடன் தினம் தினம் வேதனைப்படும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!