
மதுரை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மகன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
திருப்பாலை அன்பு நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் மகன் ரகுமான்கான் 20 . இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இது தந்தைக்கு தெரிய வந்தது .இதனால் தந்தை மகனை கண்டித்துள்ளார் .இதன் காரணமாக மனமுடைந்த ரகுமான்கான் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இவரது சாவு குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
********
மதுரை செல்லூரில் போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் தூக்கு போட்டு தற்கொலை
மதுரை போலீஸ் விசாரணைக்கு பயந்து கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை செல்லூர் காமராஜ் 2-வது தெருவை சேர்ந்தவர் கணேசன் 40 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். வழக்கம்போல நேற்றும் வீட்டுக்கு வந்து குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி காவல்நிலையத்தில் புகார் செய்யப் போவதாக சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.புகார்செய்தால் போலீசார் தன்னை விசாரிப்பார்கள் என்று பயந்தகணேசன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இந்த தற்கொலை குறித்து செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.