கீழகுன்னக்குடி பகுதியில் சுகாதார வளாகம் மற்றும் புதிய ரேஷன் கடைக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

இராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியான சத்திரப்பட்டி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூபாய் 9லட்சம் திட்ட மதிப்பீட்டில் சுகாதார வளாகம் மற்றும் கீழகுன்னக்குடி பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய ரேஷன் கடை அமைக்கும் பணியினை 9.35 லட்சம் திட்ட மதிப்பீட்டில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர் இராஜவர்மன் அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் மாடசாமி, ராஜ்குமார் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ரேஷன் கடை கட்டுவதற்காக பிஜேபியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் 4 சென்ட் இடத்தை தானமாக வழங்கியுள்ளார் அதற்கு ஊர் பொதுமக்களும் சட்டமன்ற உறுப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

வி காளமேகம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!