விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டர பகுதியில் நேற்று மாலை 5.30 மணிக்கு மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்ய ஆரம்பித்தது தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பழைய பேருந்து நிலையம் ,காந்தி சிலை ரவுண்டானா. அரசு மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி மேலும் சில வாகனங்கள் மழையில் நனைந்ததால் ஸ்டார்ட் ஆகாமல் பழுதாகி நின்றதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு அவசர சேவைக்கு செல்லக்கூடிய 108 ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து தெரிசலில் சிக்கிக்கொண்டது மழைநீர் சாலை செல்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிப்பட்டு செல்கின்றனர்நகராட்சி நிர்வாகம் கழிவு நீர் செல்லும் ஓடையை தூர்வாராமல் வாறுகாலில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் மழை நீர் செல்ல முடியாமல் சாலையில் செல்கிறதுநாகராட்சி நிர்வாகம் வாறுகால் மற்றும் ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களுடைய கோரிக்கை.
,.செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.