வாடிப்பட்டி பகுதியில் அறுவடைக்கு தயாரான நிலையில் வளர்ந்த நெற்பயிர்கள்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், மேட்டுநீரோத்தான் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் இரண்டாம் போக பாசனத்தை நம்பி 2500 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெற்பயிர்களை வளர்த்து வந்த நிலையில்நேற்று காலை முதல் இரவு வரை பெய்த தொடர் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் மழையால் சாய்ந்ததுஅறுவடைக்கு 20 நாட்களே உள்ள நிலையில் நெற்பயிர்கள் சாய்ந்து அழுகி நெற்பயிர்கள் விணாகும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து விவசாயிகள் முதலீடு செய்து அறுவடை நேரத்தில் மழையால் நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் காணப்படுகின்றனர்எனவே ஏற்கனவே பயிர் காப்பீடு திட்டத்தில் அதிக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு இழப்பீடு வழங்க முன் வரவேண்டும் என தமிழக அரசுக்கு அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!