உயிர்காக்கும் 108 ஓட்டுனரும் செவிலியர் பணியிலும் கொசுக்கடியில் அமைச்சர் தொகுதியில் அவதி படும் அவலம்…..

உயிர்காக்கும் 108 அவசர கால ஊர்தி மதுரை காளவாசல் பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இவர்கள் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதியும் மேலும் அவர்கள் தங்குவதற்காக அறையும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இதுவரை  கொடுக்கவில்லை. இவர்கள் காளவாசல் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாரணாசி கன்னியாகுமரி பாலத்தின் அடியிலேயே வாகனத்தை நிறுத்தி கொட்டும் பனியிலும் கொசு கடிக்கும் மழை நேரங்களில் சாலையில் அமர்ந்து இருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பலமுறை அதிகாரிகளிடம் மாவட்ட நிர்வாகத்திடமும் தகவல் தெரிவித்து அவர்களுக்கு என தனியாக ஒரு இடம் ஒதுக்கித் தரவில்லை. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது உடன் கொசுக்கடியால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என  சமூக ஆர்வலரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்… மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் செல்லூர் ராஜு சொந்தமான தொகுதி என்பது குறிப்பிடத்தக்கதாகும் அமைச்சர் செல்லூர் ராஜுவின் சட்ட மன்ற அலுவலகம் அருகே உள்ளது. அதில் ஒரு அறை ஒதுக்கி தரவேண்டும் எனவும் கேட்டு கொண்டனர். உயிர் காக்கும் 108 ஊழியர்களுக்கு இடம் கிடைக்குமா விடிவு காலம் பிறக்குமா??

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!