
மாணவர்கள் & இளைஞர்கள் மத்தியில் சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் மரம் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும் விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் ஐராவதநல்லூர் அருகே உள்ள விரிவாக்க பகுதியான பாபு நகரில் மத்திய அரசின் விளையாட்டு & இளைஞர் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கட்டுபாட்டின் கீழ் உள்ள நேரு யுவகேந்திரா மற்றும் வீரவாஞ்சி இளைஞர் மன்றம் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேரு யுவகேந்திரா மதுரை மாவட்ட உதவி இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தெப்பக்குளம் காவல்நிலைப சார்பு ஆய்வாளர் அன்பு தாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மரக்கன்று நட்டுவைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே வாழ்க்கையில் உயர்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.இதில் முன்னாள் வார்டு கவுன்சிலர் மலைச்சாமி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி, சந்தோஷ் உட்பட மாணவர்கள், இளைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.