விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முறம்பு மற்றும் ஆசிலாபுரம் பகுதிகளில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் உத்தரவின்பேரில் ADSP மாரிராஜ், குற்றலாலிங்கம், தலைமையில் இராஜபாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர் மேற்பார்வையில் 300 மேற்பட்ட காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.தேர்தல் விழிப்புணர்வு மற்றும் முறம்பு பகுதியில் அவ்வப்போது இரு சமுதாயத்திற்ககு இடையை மோதல் ஏற்படுவதை தொடர்ந்து அதை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக போலீசார் இந்த கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் கலவரம் நேரத்தில் பயன்படுத்தும் வஜ்ரா வாகனம் மற்றும் பாதுகாப்பு கவசம் கூடிய காவலர்கள் 300க்கும் மேற்பட்டோர் கொடி அணிவகுப்பு கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம்


You must be logged in to post a comment.