மதுரை விமான நிலையத்துக்கு கண்ணகி பெயரை சூட்ட வேண்டும் : முதல்வருக்கு செட்டியார்கள் சங்கம் கோரிக்கை

மதுரை நியு காலேஜ் ஹவுஸ் உள்ளரங்கில் தமிழ்நாடு ஆயிர வைசிய நடுமண்டலசெட்டியார்கள் சமூக நலச் சங்கத்தின் முதலாவது மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைப் பெற்றது .கூட்டத்தில் மாநில தலைவர் எம்.எம்.கணேசன் , பொதுச் செயலாளர் டி.முருகபாண்டியன் , துணை செயலாளர் கே. முரளி , பொருளாளர் ராம்குமார் , துணைத்தலைவர் திருப்பதி , தலைமை நிலைய செயலாளர் ராமமூர்த்தி , மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ். பாண்டிமற்றும் சங்கத்தின் துணை அமைப்பாளர்கள் , டிரஸ்டு ஆலோசகர்கள் கலந்துக் கொண்டனர்.ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளருக்கு பேட்டி அளித்த தலைவர் எம்.எம். கணேசன்மதுரை விமான நிலையத்துக்கு கற்புக்கரசி கண்ணகி பெயரை சூட்ட வேண்டும் என்றும் மேலும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் தங்களது சமுதாயத்திற்கு 25 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேண்டுகோள் விடுத்தார்.மேலும் , தங்களது இனத்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்பு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.இவ்விழாவில் செட்டியார் சமூகத்தைச் சார்ந்த நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவ மாணவர்களுக்கு நினைவு பரிசுகளும் , பாராட்டி சான்றிதழ்களும்
வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!