தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்கள் மற்றும் கூட்டமான இடங்களில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அரசு மற்றும் சுகாதாரதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்தநிலையில் கடந்த மூன்று தினங்களாக மதுரை அவனியாபுரம் அருகேயுள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் குழந்தைகளை அனுமதிப்பதில்லை என்று அறிவித்துள்ளதாக சூப்பர்மார்க்கெட் தரப்பில் கூறப்படுகிறது.இதனை அறியாமல் மதுரையில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து வீட்டிற்க்கு தேவையான பொருட்களை வாங்க கைக் குழந்தைகளுடன் வந்த வாடிக்கையாளர்களை தடுத்து நிறுத்திய ஊழியர்கள் குழந்தையை வெளியிலேயே விட்டு செல்லுமாறு கூறியதால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து சிலர் தங்களது பிள்ளைகளை வெளியிலேயே விட்டுவிட்டு பொருள்களை வங்குவதற்கு ஆர்வம் காட்டி வந்தனர், அவர்களது குழந்தைகள் வெளியில் கொரோனா குறித்த எண்ணமே இன்றி ஒருபுறம் சூப்பர் மார்க்கெட் வளாகம் முழுவதும் சுற்றி திறிந்தனர்.இதனையடுத்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் வாடிக்கையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பின்னர் கூட்டம் குறைந்த பின்னர் அனுமதிப்பதாக கூறியதை அடுத்து பின்னர் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷாப்பிங் மேற்கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.