மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சாலையில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு அச்சத்தையும்,பயமுறுத்துதல்களையும் ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்யும்படி கடந்த 19.12.2020 தேதி உத்தரவிட்டார்கள். உத்தரவுப்படிமதுரை மாநகர்
முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர்பொதுமக்களுக்கு அச்சத்தையும் பயமுறுத்துதல்களையும் ஏற்படுத்தும் விதமாக சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிக ஒலி எழுப்பக் கூடிய சைலன்ஸர் பொருத்திய வாகனங்களை உடனடியாக பறிமுதல் செய்து அபராதங்களும் விதிக்கப்பட்டன. அபராதம் விதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களில் குறைந்த ஒலி எழுப்பக் கூடிய சைலன்சர்கள் பொருத்தப்பட்ட பின்னர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளிடம் காண்பித்துவிட்டு இருசக்கர வாகனத்தின் உரிமையாளர்கள் அவர்களது இரு சக்கர வாகனத்தை எடுத்துச் செல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன. கடந்த 19.12.2020- ம் தேதி முதல் 23.12.2020- ம் தேதி 196 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.