பரவையில் வினோத நத்தை தாக்குதல் அழிந்து வரும் வாழை மரங்கள் வேளாண்துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

மதுரை மாவட்டம் பரவை அருகே நவநீதன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பு உள்ளது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாழை பயிரிட்டு தற்போது காய் பிடித்து விரைவில் வெட்டப்படும் சூழ்நிலையில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இலைகள் அறுக்கும்போது இதன் அளவுகள் கணிசமாக குறைவதை கண்டார். தொடர்ந்து பார்வையிட்டபோது , வாழைமரத்தில் வினோத நத்தைகள் இலைகள் முழுவதையும் கடித்து உண்டு வாழ்ந்து வந்தன .வேளாண் துறை அதிகாரியிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வாலை காய்களிலும் அதன் அருகே உள்ள நெற்பயிரில் வரப்புகளில் வளர்ந்துள்ள அகத்தி மரங்களிலும் தோட்ட பராமரிப்பில் வைத்துள்ள மருதாணி செடிகளிலும் இந்த நத்தை பரவுகிறது சிறிய அளவில் உள்ள போது அதனை தட்டிவிட்டு பூச்சி மருந்து தெளித்து அதனை அளித்து வந்தோம். தற்போது, ஒரு மரத்திற்கு 15 முதல் 20 நத்தை மரத்தை அழிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது .இதனை உடனடியாக தோட்டக் கலைத் துறை அதிகாரிகளும் வேளாண் துறை அதிகாரிகளும் நேரடியாக பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.இது தொடரும் பட்சத்தில் அனைத்து விவசாயிகளும் பால் படும் சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!