மாநகராட்சி குப்பை லாரி ஓட்டுனரின் அலட்சியத்தால் மோதி 21 வயது இளம்பெண் தலைநசுங்கி உயிரிழப்பு.

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பகுதியை சேர்ந்த பாபுலால் என்பவரின் மகள் துர்கா தேவி. இவர் மதுரைகீழவெளி பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அப்பா உடன் சென்ற போது சாலையை ஒரு புறத்திலிருந்து மறு புறமாக கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரி இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்நிலையில் சம்பவ இடத்திலேயே துர்காதேவி தலைநசுங்கி உயிரிழந்தார். இந்நிலையில் உடலைகைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு உடலானது அனுப்பி வைக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதாவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை கீழவெளி பகுதியில் மாநகராட்சி சொந்தமான குப்பைலாரிகள் தண்ணீர் லாரிகள் வாகன ஓட்டிகள் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குவதாக அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!