32 கிலோ மீட்டர் சாலை அமைத்ததாக RTI க்கு தவறான தகவல் அளித்த மதுரை மாநகராட்சி.

மதுரை வைகை நதி தெற்கு கரையோரப் பகுதிகளில் தெப்பக் குளத்திலிருந்து விரகனுர் வரை 5 கிலோ மீட்டருக்கு சாலை அமைத்தது32 கிலோ மீட்டர் சாலை அமைத்ததாக RTI க்கு தவறான தகவல் அளித்த மதுரை மாநகராட்சி.81கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை நதியின் இரு கரையோரங்களிலும் ஜியோ டாக் எனப்படும் வைகைநதி எல்லை வரையறை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான ஐந்து கிலோ மீட்டர் சாலை மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைக்கான பணிகள் நடந்து வருகிறது .சென்னையைச் சேர்ந்த வக்கீல் கனகராஜ் என்பவருக்கு மதுரை மாநகராட்சி தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் அளித்த பதில் மனுவில் 32 கிலோ மீட்டர் சாலை பணிகள் முடிவடைந்தது உள்ளது. மீதமுள்ள 10 கிலோ மீட்டர் சாலை பணிகள் மட்டும் முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது .முடிவடையாத பணிகளை முடிவடைந்ததாக கூறிய தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.இதனை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரும் தமிழக தகவல் உரிமை பிரிவு தலைவருமான கனகராஜ் என்பவர் இன்று ஆய்வு செய்தார் அதில் தெப்பக்குளத்தில் இருந்து விரகனூர் வரையிலான பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.ஆனால் மீதமுள்ள பணிகள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.அதற்கு முன்னதாகவே 32 கிலோமீட்டர் பணிகள் முடிவடைந்ததாக பொய்யான தகவல்களை அளித்துள்ளனர். மேலும் விரகணூர் அணை பகுதியில் உள்ள மடைகளில் வெங்காயத் தாமரை சூழ்ந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது.மேலும் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு செல்லும் தண்ணீரின் அளவு வெளியேற்றும் போது முழுமையாக பாதிக்கப்படுகிறது.வெங்காய தாமரை விரகனூர் டேமில் இருப்பதால் அங்கு மீன் போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு தடையாக உள்ளது. இதனை பொதுப்பணித்துறை அகற்ற வேண்டும் என்றும் மதுரையில் உள்ள அமைச்சர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!